விவாகரத்து; வாழ்க்கையை இழந்துவிட்டேன்.. நெகட்டிவாக இருக்க முடியல - அபிஷேக் பச்சன்!

Aishwarya Rai Divorce Abhishek Bachchan Social Media
By Swetha Nov 26, 2024 04:30 PM GMT
Report

தனது விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு பட்டும் படாமலும் பதில் அளித்துள்ளார் அபிஷேக் பச்சன்.

விவாகரத்து..

இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜஸ்வர்யா ராய். முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய், கடந்த 2007-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.

விவாகரத்து; வாழ்க்கையை இழந்துவிட்டேன்.. நெகட்டிவாக இருக்க முடியல - அபிஷேக் பச்சன்! | Abhishek Bachchan Opens About His Rumours

இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். ஐஸ்வர்யா ராய் கடைசியாக தமிழில் நடித்த படம் பொன்னியின் செல்வன். இவர் அபிஷேக் பச்சன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

எனினும் கடந்த சில மாதங்களாக அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெறவிருக்கிறார்கள் என்ற வதந்திகள் தொடர்ந்து பரவி வருகிறது. இந்நிலையில் தனது நடிப்பில் வெளியாகியுள்ள,

ஹனிமூன் போயிருந்த போது நடந்த அந்த சம்பவம் - ஓப்பனாக பேசிய ஐஸ்வர்யா ராய்!

ஹனிமூன் போயிருந்த போது நடந்த அந்த சம்பவம் - ஓப்பனாக பேசிய ஐஸ்வர்யா ராய்!

அபிஷேக் பச்சன்

ஐ வாண்ட் டூ டாக் படத்தின் ப்ரோமோசனில் கலந்து கொண்ட அபிஷேப் பச்சனிடம் இது தொடர்பாக மறைமுகமாக கேள்வி கேட்கப்பட்டது. அதாவது, உங்களை நோக்கி வரும் வதந்திகள், அவதூறுகளை எப்படிக் கையாளுகின்றீர்கள், அதெற்கெல்லாம் நீங்கள் ரியாக்ட் செய்வதே இல்லையே என்று கேட்கப்பட்டது.

விவாகரத்து; வாழ்க்கையை இழந்துவிட்டேன்.. நெகட்டிவாக இருக்க முடியல - அபிஷேக் பச்சன்! | Abhishek Bachchan Opens About His Rumours

அதற்கு பதிலளித்த அவர், கெட்டவன் கெட்டவனாக இருப்பதை நிறுத்தவில்லை என்றால், நல்லவன் நல்லவனாக இருப்பதை ஏன் நிறுத்தவேண்டும்?. நான் மிகவுமே பாசிட்டிவான ஆள். என்னால் நெகட்டிவாக இருக்க முடியாது, நெகட்டிவிட்டியுடனும் இருக்க முடியாது.

என்னைப் பற்றி வரக்கூடிய நெகட்டிவிட்டி கருத்துக்களுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருந்தால் நான் அவர்களுக்கு பதில் சொல்வதிலேயே என் வாழ்க்கையை இழந்துவிடுவேன். நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது" என்று தெரிவித்தார்.