காதலுக்கு மரியாதை படத்தை மிஸ் பண்ணிட்டேன்; விரக்தியில் புலம்பும் பிரபல நடிகர்!
காதலுக்கு மரியாதை படத்தை மிஸ் செய்ததாக பிரபல நடிகர் ஒருவர் வருந்தியுள்ளார்.
காதலுக்கு மரியாதை
மலையாளத்தில் பாசில் இயக்கிய அணியாதிபிரபு என்னும் படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படமாக உருவானதுதான் காதலுக்கு மரியாதை. இந்தப் படத்தில் விஜய் மற்றும் ஷாலினி நடித்திருப்பார்கள்.

மேலும், சிவகுமார், ஸ்ரீவித்யா, மணிவண்ணன், தலைவாசல் விஜய், ராதாரவி என பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் புதுமுக நடிகையைதான் ஹீரோயினாக நடிக்க வைக்கவேண்டும் என எண்ணியுள்ளனர்.
வருந்திய அப்பாஸ்
ஆனால் இந்த படத்தின் மலையாள வெர்ஷனில் ஹீரோயினாக நடித்த ஷாலினி தமிழ் வெர்ஷனிலும் தானே நடிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டதால் அவரையே நடிக்க வைத்துள்ளனர். அதேபோல், இந்த படத்தில் ஹீரோவாக அப்பாஸ் நடிக்க வேண்டும் என இயக்குனர் அவரது மேனேஜரை அணுகியுள்ளார்.

ஆனால், அப்பாஸின் மேனேஜர் ஏற்கனவே பல படங்கள் இருப்பதால் அவர் புதிய படங்களில் நடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அதன்பின் விஜய் அதற்கு ஃபிக்ஸ் ஆனதும் இதுகுறித்து அறிந்த அப்பாஸ் படத்தை மிஸ் செய்துவிட்டதாக வருந்தியுள்ளார்.
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil