குஷ்பூவின் வெறித்தனமான ரசிகர் அவருக்கு எதிராக ஆயிரம் விளக்கு தொகுதியில் களம் காண்கிறார்
குஷ்புவுக்காக சின்னத்தம்பி படத்தை 10 முறை பார்த்த வெறித்தனமான ரசிகர் ஒருவர் அமமுக வேட்பாளராக குஷ்புவை எதிர்த்து களமிறங்கியுள்ளார். 1991 ஆம் ஆண்டு பிரபு மற்றும் குஷ்புவின் நடிப்பில் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் பட்டைய கிளக்கிய சின்னதம்பி படத்தை குஷ்புவுக்காக 10 முறைக்கும் மேல் பார்த்த வெறித்தனமான ரசிகர் தான் இந்த வைத்தியனாதன்.
தற்போது ஆயிரம் விளக்கு தொகுதியில் அமமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார் வைத்திய நாதன். சின்னதம்பி, அண்ணாமலை என குஷ்பு நடித்த ஒவ்வொரு படங்களையும் 10 முறைக்கும் மேலாக திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளதாக தெரிவித்தார் வைத்திய நாதன்.
அதற்காக அவருக்கு ஓட்டுப்போட முடியுமா என்று கேள்வி எழுப்பிய வைத்திய நாதன், பொதுமக்கள் எல்லோரும் குஷ்பு நடித்த படங்களை பார்த்து ரசிப்பர்கள் ஆனால் ஓட்டுபோட மாட்டார்கள் என்றார்.
சின்னதம்பி படத்தில் நடித்த பிரபுவே எங்கள் பக்கம் என்று கூறிய வைத்திய நாதன், குஷ்புவிற்கு ஓட்டுப்போட்டால், வாக்குகளை எண்ணி முடிப்பதற்குள் அவர் வேறொரொ கட்சிக்கு தாவி விடுவார் எனவே மக்கள் அவரை நம்பமாட்டார்கள் என்று தெரிவித்தார்.