புதிய பொருளை அறிமுகப்படுத்தும் ஆவின் - என்ன தெரியுமா?
அதிக புரதச்சத்துடன் தயிர் பாக்கெட் வகைகளை அறிமுகப்படுத்த ஆவின் திட்டமிட்டுள்ளது.
தயிர் பாக்கெட்டுகள்
தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. தினசரி 34 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஆரஞ்சு, பச்சை, நீலம், ஊதா நிறப் பாக்கெட்களில் விற்கப்படுகிறது. மேலும் வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உட்பட 200-க்கும் மேற்பட்ட பொருட்கள் 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
ஆவின் முடிவு
இந்நிலையில் அதிக புரதச்சத்துடன் கூடிய தயிர் பாக்கெட் வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இவற்றை 120 மிலி, 250 மிலி, 450 மிலி ஆகியவகைகளில், 1.5 சதவீதம் கொழுப்புச் சத்தும், 11.5 சதவீதம் இதர புரதச் சத்துகளும் கொண்ட தயிர் பாக்கெட் வகைகளை அறிமுகப்படுத்தவுள்ளனர்.
இதில் புரதச்சத்து அதிகம் இருப்பதால், எல்லாத் தரப்பு மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, உடல் பயிற்சி மேற்கொள்பவர்கள், வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த தயிர் வகை பாக்கெட்களை சென்னையில் உள்ள குறிப்பிட்ட பாலகங்களில் அறிமுகப்படுத்துவோம்.
அதன்பிறகு, படிப்படியாக மற்ற இடங்களில் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வினீத் தெரிவித்துள்ளார்.