ஆதித்தமிழர் பேரவை - வரலாறும்...அரசியலும் !!

Tamil nadu Coimbatore
By Karthick May 27, 2024 09:50 AM GMT
Report

ஆதித்தமிழர் பேரவை

ஆதித்தமிழர் பேரவை (Aathi Thamizhar Peravai) தமிழ்நாட்டில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, குறிப்பாக அருந்ததியர் சமூக மக்களுக்காக இயங்கும் ஒரு அமைப்பாகும். இப்பேரவையை இரா.அதியமான் 1994-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

ATK flag

ஆதித்தமிழர்களின் பொருளாதார, பண்பாட்டு, சமூக தரத்தை உயர்த்துவதே இந்த அமைப்பின் நோக்கமாகக் கூறப்படுகிறது. நாட்டின் முக்கிய தலைவர்களான அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்சு ஆகியோர்களை தங்களது வழிகாட்டிகளாக இப்பேரவை ஏற்றுள்ளது.

வரலாறு

1980-களில் Youth Guidance Service(YGS) இளைஞர் வழிகாட்டல் சேவை என்ற இயக்கத்தில் பெரும் ஈடுபாட்டுடன் இருந்து வந்த இரா.அதியமான், அருந்ததியின் மக்களின் அனைத்து அமைப்புகளையும் YGS ஒரே அமைப்பாக இணைக்க கடினப்படுவதை அறிந்துள்ளார்.

Adhiyaman atk

அதன் காரணமாக, தனது நண்பர் பெருமாள் என்பவருடன் இணைந்து Tamil Nadu All Arunthathiyar Sangam Coordination” (TAASCO) - தமிழ்நாடு அனைத்து அருந்ததியர் சங்க ஒருங்கிணைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பின்னர் 1994-ஆம் ஆண்டு கோவையில் வைத்து ஆதித்தமிழர் பேரவையை நிறுவினார்.

இப்பேரவையின் முழக்கமாக அருந்ததியர் விடுதலை அனைவருக்கும் விடுதலை என எடுக்கப்பட்டது. ஏடிபி தொடங்கப்பட்டதில் இருந்து, இன்றுவரை, தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் சுமார் 500 கிளைகள் இருப்பதாக குறிப்பிடப்படும் நிலையில், மும்பை மற்றும் புதுதில்லியிலும் கிளைகள் நிறுவப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

ATK Adhiyaman

தற்போதைய சூழலில் இப்பேரவையின் முதல் கவனமாக உள்ளது தமிழ்நாட்டில் மேன்ஹோல் துப்புரவு முறையை மொத்தமாக ஒழிப்பதாகும். அதனை தொடர்ந்து, அருந்ததியர் சமூகத்தினருக்கு மத்திய அரசுத் துறைகளிலும், பொதுத் துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்துவது மற்றும் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவிப்பது ATP இன் முக்கிய கவனம் செலுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரனின் நட்பு கை கொடுத்ததா சீமானுக்கு - நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியும் அதன் பின்னணியும்

பிரபாகரனின் நட்பு கை கொடுத்ததா சீமானுக்கு - நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியும் அதன் பின்னணியும்

2004 இல் கையால் துப்புரவு பணியாளர்களுக்கான வெற்றிகரமாக மறுவாழ்வு மாநாட்டை ஏற்பாடு செய்த பின்னர், அப்பிரச்சினையை ஐநாவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றது இந்த பேரவையின் பெரிய நகர்வாகும்.

தேர்தல் வரலாறு

கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தல் அரசியலில் இப்பேரவை களம் கண்டது. திமுகவின் கூட்டணியில் இணைந்த இவர்கள் கொங்கு மணடலத்திலேயே போட்டியிட்டார்கள்.

Adhiyaman with MK stalin

திருப்பூரின் அவிநாசி தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கிய இரா. அதியமான் எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் வேட்பாளர் தனபாலிடம் சுமார் 50,982 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.