ஆருத்ரா நிறுவனம் ரூ .2,438 கோடி மோசடி : பாஜக நிர்வாகி கைது
ஆருத்ரா கோல்டு நிறுவனபண மோசடி வழக்கில் முக்கிய குற்றாவாளியாக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆருத்ரா நிறுவனம்
கடந்த மே மாதம் ஆரணியில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் உருவாகியுள்ளது. பொதுமக்களிடம் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதம் 30 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்ற விளம்பரங்கள் மூலம் ரூ.2,348 கோடி பண மோசடி செய்துள்ளது.
தொடர்ந்து, புகாரின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனத்தினை சோதனையிட்டனர். மேலும் அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தியது.
பாஜக நிர்வாகி கைது
இந்நிலையில், ஆருத்ரா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஹரிஷ் கைது செய்யப்பட்டார். இவர் பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ளார். மேலும், மற்றொரு இயக்குனரான மாலதி என்பவரையும் கைது செய்துள்ளனர்.
சோதனையில், டெபாசிட் விவரங்கள் தொடர்பான லெட்டர்கள், பதிவேடுகள், 48 கணினிகளின் ஹார்டு டிஸ்க், 6 மடிக்கணினிகள், 44 மொபைல் போன்கள், 60 சவரன் தங்கம், 2 கார்கள் மற்றும் ரூ.3.41 கோடி பெரும் ரொக்கம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரொக்கமாக வசூலான பணம் டெபாசிட் செய்யப்பட்ட 11 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியினால் அங்கிகரிக்கப்பட்ட நிறுவங்களில் மட்டுமே மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என அறியுறுத்தப்பட்டுள்ளனர்.