மோசடி மன்னனால் கர்ப்பமான பிரபல நடிகை - பகீர் தகவல்
நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜாக்குலின் ஃபெர்னான்டஸ்
பெங்களூருவை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் சினிமா பிரபலங்கள் என பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் பண மோசடி செய்துள்ளார். தொழிலதிபர் ஒருவரின் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
விசாரணையில், பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், நோரா பதேகி, நிக்கி தம்போலி உள்ளிட்ட பல நடிகைகளுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதில், நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸுடன் சுகேஷ் சந்திர சேகர் நெருக்கமாக இருந்துள்ளார்.
கர்ப்பம்?
ஜாக்குலினுக்கு மினி ஹுப்பர் கார், குதிரை, விலை உயர்ந்த நகைகள், காலணிகள், ஹேண்ட் பேக்குகள் என சுமார் 8 கோடி ரூபாய்க்கு பரிசுகளை சுகேஷ் சந்திரசேகர் வழங்கியதும் தெரியவந்தது.
#JacquelineFernandez was Pregnant with Con man #SukeshChandrashekhar’s Child. She did abortion.
— Umair Sandhu (@UmairSandu) February 7, 2023
இந்நிலையில் ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் சுகேஷ் சந்திரசேகரால் கர்ப்பமாகி பின்னர் கருக்கலைப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஓவர் சீஸ் சென்சார்போர்டு உறுப்பினரும் திரைப்பட விமர்சகருமான உமர் சந்த் என்பவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் இந்த ஷாக்கிங் தகவலை தெரிவித்துள்ளார். இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.