மாசம் 40 லட்சம் கேட்கும் ஆர்த்தி - அறிக்கைக்கு கெனிஷா செய்த செயல்

Tamil Cinema Divorce Aarti Ravi Kenishaa Francis Ravi Mohan
By Sumathi May 21, 2025 10:18 AM GMT
Report

ஆர்த்தி ரவி மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சம் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

மாதம் 40 லட்சம்

நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மாசம் 40 லட்சம் கேட்கும் ஆர்த்தி - அறிக்கைக்கு கெனிஷா செய்த செயல் | Aarti Ravi Demands 40 Lakhs Per Month Alimony

இந்த மனுவை விசாரித்த சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றம், சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது. அதன்படி நடிகர் ரவி, ஆர்த்தி ஆகியோர் சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நடிகர் ரவி மோகன் தரப்பில் ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து அளிக்க வேண்டும் என்றும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆர்த்தியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எனது உயிர்நாடி கெனிஷாதான்; தெரபிஸ்ட்டாக உதவவில்லை - ரவி மோகன் கடைசி அறிக்கை

எனது உயிர்நாடி கெனிஷாதான்; தெரபிஸ்ட்டாக உதவவில்லை - ரவி மோகன் கடைசி அறிக்கை

ஆர்த்தி ரவி மனுதாக்கல்

தொடர்ந்து மாதம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சமாக நடிகர் ரவி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் ஆர்த்தி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்களுக்கு நடிகர் ரவி மோகன், ஆர்த்தி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 12 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

மாசம் 40 லட்சம் கேட்கும் ஆர்த்தி - அறிக்கைக்கு கெனிஷா செய்த செயல் | Aarti Ravi Demands 40 Lakhs Per Month Alimony

இதற்கிடையில் ஆர்த்தி அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் கெனிஷா இருவருக்கும் இடையே உள்ள உறவு குறித்து மறைமுகமாக பதிவு செய்திருந்தார். முன்னதாக கெனிஷா தன்னைப் பற்றியும் ரவி மோகன் குறித்தும் ஆறுதலாக வரும் பதிவுகளை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார்.

இந்த அறிக்கைக்குப் பின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருந்த எல்லா பதிவுகளையும், ஸ்டோரிகளையும் கெனிஷா டெலிட் செய்துள்ளார்.