தனுஷுடன் ஆர்த்தி ரவி எடுத்த புகைப்படம்... புதிய புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா!
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு இடையேயான பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது. இந்நிலையில் பாடகி சுசித்ரா இது குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள் மற்றும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு என்பன இணையத்தில் மீண்டும் புதிய புயலை கிளப்பி வருகின்றது.
ரவி மோகன்
தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ரவி மோகன். கடந்த ஆண்டு இறுதியில் திடீரென பெயரை மாற்றினார், இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் தனித்துவமான பாணியில் இருப்பதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இவரது நடிப்பில் கடைசியாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகின்றது.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
அதுமட்டுமன்றி டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு திரைப்படத்திலும் ரவி மோகன் நடித்து வருகிறார்.
ரவியின் விவாகரத்து அறிவிப்பு வெளியான சமயத்தில், இன்னொரு விஷயமும் வெளியானது. அது ஒரு புகைப்படம் ஆகும். இதில் அவர் கோவாவை சேர்ந்த கெனிஷா என்ற பாடகியுடன் இருந்தார்.
இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து அனைத்து ஊடகங்களும் இருவரும் காதலிக்கின்றனரா என கிசுகிசுக்களை பரப்ப தொடங்கின. இருவரும் தாங்கள் வெறும் நண்பர்கள்தான் என்றும், அதைத்தாண்டி தங்களுக்குள் ஒன்றும் இல்லை என்றும் கூறினர். சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமனம் நடந்தது.
இதில், கோல்டன் நிற ஆடை அணிந்து ரவி மோகனும் கெனிஷாவும் கலந்து கொண்டனர். போதாக்குறைக்கு இருவரும் கைக்கோர்த்துக்கொண்டு வேறு சென்றனர்.
இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. அதழனை தொடர்ந்து ஆர்த்தி ரவி மோகன் குறித்து ஒரு பரப்பான அறிக்கையை வெளியிட்டார்.
பின்னர் தான் முதுகில் குத்தப்பட்டுவந்ததாகவும் தற்போது நெஞ்சில் குத்தப்படுவதாகவும் குறிப்பிட்டு ரவி மோகன் அறிக்கை வெளியிட்டார்.
பின்னர் முதுகில் குத்தப்படதாக குறிப்பிடப்டடது சொத்துகளை அபகரித்தாக குறிப்பிட்டது அனைத்தும் பொய் ஒரு ரூபாயால் ரவி மோகன் ஏமாற்றப்பட்டிருந்தால் கூட ஆதாரத்தை வெளியிடட்டும் என் ரவி மோகனனின் மாமியாரும் தயாரிப்பாளருமான சுஜாதா அறிக்கை வெளியிட்டார்.
பாடகி சுசித்ரா வெளியிட்ட பதிவு
இந்த புயலே இன்னும் இணையத்தில் அடங்காத நிலையில் தற்போது பாடகி சுசித்ரா, சமீப காலமாக ஜெயம் ரவி-கெனிஷாவிற்கு ஆதரவாக சில பதிவுகளை வெளியிட்டிருந்தார்.
இது குறித்த வீடியோக்களில் அவர் ஆரத்தி தாய்மையை வைத்து பிறரை ஏமாற்றுவதாகவும், இவர்கள் குறித்த விஷயத்தில் முடிவெடுக்க யாரும் நீதிபதி இல்லை என்றும் கூறினார். இந்த நிலையில், ஜெயம் ரவியுடன் ஒன்றாக இருக்கும் போதே, தனுஷ் உடன் உறவில் இருந்ததாக கூறியிருக்கிறார்.
இது குறித்த நேர்காணலிலும் கலந்து கொண்டார். இதையடுத்து, தற்போது ஆர்த்தி ரவி, தனுஷுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார். குறித்த பதிவில் ஆர்த்தி தனுஷுடன் நாக்கை வெளியில் தள்ளியாவாறு போட்டோ எடுத்திருக்கிறார்.
இதில் கேப்ஷனாக சுசித்ரா, “ChatGPT-ஐ டவுன்லோட் செய்து, நாக்கை வெளியில் தள்ளி புகைப்படம் எடுத்திருப்பதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன என்று கேளுங்கள்”. என்று குறிப்பிட்டிருக்கிறார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் புதிய சர்சையை கிளப்பியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
