ஜெயம் ரவியுடன் விவாகரத்து இல்லை - மனைவி ஆர்த்தி செய்த செயல்!
ஜெயம் ரவியை விவாகரத்து செய்யவில்லை என ஆர்த்தி உறுதி செய்துள்ளார்.
ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் சைரன் திரைப்படம் வெளியானது.
கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தொடர்ந்து, தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்து பிரிந்து வரும் நிலையில்,
விவாகரத்து
முன்னணி நடிகர் ஆன ஜெயம் ரவி தனது மனைவியை பிரியப் போவதாக வதந்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆனால், கடந்த மாதம் ஜெயம் படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, அந்தப் படம் பற்றி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பதிவிட்டிருந்தார்.
இருப்பினும், அவருடன் இருந்த புகைப்படங்களையும் நீக்கிவிட்டார்.
இந்நிலையில், ஆர்த்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து ஜெயம் ரவியை திருமணம் செய்திருக்கிறேன் என்பதை நீக்கவில்லை. மேலும், தனது பெயரிலிருந்தும் ரவியை நீக்கவில்லை.
இதன்மூலம் இருவரும் விவாகரத்து செய்யவில்லை என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.