5 மாநிலத்தில் கூட்டணி ஓகே - கைகோர்த்த காங்கிரஸ் - ஆம் ஆத்மீ - ஷாக்கில் பாஜக
5 மாநிலத்தில் ஒன்றாக தேர்தலை சந்திப்பது என ஆம் ஆத்மீ மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி முரண்பாடு
மாநிலத்தில் பெரிதாக காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மீ போன்ற கட்சிகள் அரசியல் களம் வந்தனர்.
ஆனால், அரசியல் மாற்றங்களின் காரணமாக தற்போது பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்சிகளின் கூட்டணியும், ஆம் ஆத்மீ கட்சிக்கும் காங்கிரஸ் தேவைப்பட்டன.
அப்படி உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது என்றும், அவர்களின் கூட்டணி விரைவில் உடைந்து விடும் என்று பாஜகவின் வலுவாக வாதங்களை வைத்து வந்தனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே, டெல்லி பஞ்சாப், மேற்குவங்க மாநிலங்களில் கூட்டணி இல்லை என முறையே ஆம் ஆத்மீ மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளின் முன்னர் அறிவித்தனர்.
இதன் காரணமாக, பாஜக கூடாரம் சந்தோஷத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது அவர்களுக்கு சற்று கலக்கத்தை ஆம் ஆத்மீ மற்றும் காங்கிரஸ் கட்சி கொடுத்துள்ளது.
5 மாநிலங்களில் அதாவது டெல்லி, ஹரியானா, கோவா, சண்டிகர் மற்றும் குஜராத் மாநிலங்களில் கூட்டணி உடன்பாடு ஆம் ஆத்மீ மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே நடைபெற்றுள்ளது.
அதன்படி, டெல்லி 7 மக்களவை தொகுதிகளில் 4 - ஆம் ஆத்மீ, 3 - காங்கிரஸ்
குஜராத் 26 மக்களவை தொகுதிகளில் 24 - காங்கிரஸ் 2 (பரூச், பாவ்நகர்) - ஆம் ஆத்மி
Delhi | Congress and AAP announce seat-sharing in Delhi, Gujarat, Haryana, Chandigarh and Goa
— ANI (@ANI) February 24, 2024
In Delhi (7 seats), Congress to contest on 3 and AAP on 4
In Gujarat (26 seats), Congress to contest on 24 and AAP on 2 (in Bharuch and Bhavnagar)
In Haryana (10 seats), Congress to… pic.twitter.com/vCauAdvkUm
ஹரியானா 10 மக்களவை தொகுதிகளில் 9 - காங்கிரஸ் 1(குருஷேத்ரா) - ஆம் ஆத்மி
அதே போல சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் ஒரே ஒரு மக்களவை தொகுதியிலும், கோவாவின் 2 மக்களவை தொகுதிகளிலுமே காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.