இந்தியா அணியில் பெரிய பிரச்சினை உள்ளது - அணியை வறுத்தெடுத்த முன்னாள் வீரர்

Karthikraja
in கிரிக்கெட்Report this article
இந்திய அணியின் பேட்டிங்கில் பிரச்சனை உள்ளதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி
இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், 2வது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆகாஷ் சோப்ரா
இதற்கு முன்னதாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இதில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் ஒயிட் வாஷ் ஆனது.
இந்தியா அணியின் முன்னணி வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பி வரும் நிலையில் இது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, கடைசி 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இரண்டு முறை மட்டுமே சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.
பேட்டிங்கில் பிரச்சினை
அந்த 2 முறையும், இரண்டாவது இன்னிங்ஸ் ஆகும். நன்றாக ஆடி ரன் குவித்த இரண்டு இன்னிங்ஸ்களிலும் பேட்டிங் செய்ய சாதகமான சூழ்நிலை இருந்ததால் தான் அப்போதும் ரன் குவிக்க முடிந்தது. ஆனால் ஒருவரும் 50 பந்துகளை கூட ஆடவில்லை. முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள். சவாலான சூழ்நிலைகளில் இந்திய அணியின் பேட்டிங் சரிவை சந்தித்து வருகிறது.
இந்திய அணியின் பேட்டிங்கில் நிச்சயம் பிரச்சனை உள்ளது. அதில் முன்னேற வேண்டுமானால் முதலில் இங்கு பிரச்சனை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். என்ன பிரச்சனை என்றே தெரியாமல் எதை நீங்கள் முன்னேற்றுவீர்கள் என தெரிவித்துள்ளார்.