ஆடிப்பெருக்கில் ஆண்டாள் திருமணம் - ஜோதிடம் சொல்வது என்ன?
2024ம் ஆண்டில் ஆடிப் பெருக்கு தினம் ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
நல்ல நேரம்
காலை - 7.45 முதல் 8.45 வரை
மாலை- 4.45 முதல் 5.45 வரை
அன்று பிற்பகல் வரை புனர்பூசம் நட்சத்திரமும் பிறகு பூசம் நட்சத்திரமும் வருவதால் காலை 9 மணிக்குள் வழிபாட்டினை முடிக்க வேண்டும் அந்த நேரத்தில் தாலி கயிறு மாற்றி கொள்ளலாம் எனவும் என கூறப்படுகிறது.
ஆடிப்பெருக்கு
பெருக்கு என்றால் பெருகுவது என்று அர்த்தம். ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். மேலும் காவிரி நீர் வரவேற்கும் விதமாகவும் கொண்டப்படுகிறது.
ஆண்டாள் திருமணம்
ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப் பூரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு விமர்சையாகக கொண்டாடப்படும்.
ஜோதிடம் சொல்வது என்ன?
சந்திர பகவான் ஒரு நீர் கிரகம் என்பதால் சந்திரனுக்கு உரிய கடக ராசியில் ஆடி மாதம் நடக்கிறது. ஆடி மாதம் 18ம் தினத்தில் சூரிய பகவான் கடக ராசியில் பூச நட்சத்திரத்தில் இருந்து ஆயில்யம் நட்சத்திரத்திற்கு மாறுகிறார்.
பூச நட்சத்திரமானது சனி பகவானின் நட்சத்திரம் ஆகும். சனி பகவானின் பிரகஸ்பதி தேவகுரு. சூரிய பகவானின் பார்வையில் இருந்து தேவகுரு விடுபட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு செல்லும் நாள் ஆடி 18.
சூரியனும் புதனும் நட்பு கிரகமாகும் இந்த நன்னாளில் தொடங்கும் அனைத்து செயல்களும் வெற்றியில் முடியும் என்பது ஐதீகம் ஆகும்.