ஆடி அமாவசை; முன்னோர் ஆசி வேண்டுமா? மறக்காமல் இதை மட்டும் பண்ணுங்க
ஆடி அமாவாசைக்கு முன்னோர் ஆசி பெற என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
ஆடி அமாவசை
அமாவாசை என்பது முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாகும். இந்த நாளில் , முன்னோர்களை நினைத்து விரதம் இருந்து, அவர்களுக்கு பிடித்தமான உணவு சமைத்து, அதை முன்னோர்களுக்கு கொடுப்பதாக நினைத்து காக்கைகளுக்கு கொடுத்த பிறகு தான் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுவது வழக்கம்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் தை, புரட்டாசி, ஆடி மாதங்களில் வரும் அமாவாசை தான் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த வகையில், ஆடி அமாவாசையானது ஆகஸ்ட் 4 இன்றைய தினம் வந்துள்ளது.
தானம்
இன்றைய தினத்தில் முன்னோர் சாபம் நீங்க, முன்னோர்கள் ஆசி கிடைக்க எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை பார்ப்போம். இன்றைய தினத்தில், வெல்லம், துண்டு அல்லது வேஷ்டி ஆகியவற்றை வாங்கி பூஜை அறையில் வைத்து, முன்னோர்களது ஆசி கிடைக்கவும், முன்னோர்களால் ஏற்பட்ட சாபம் நீங்கவும் முழு மனதுடன் வழிபாடு செய்யுங்கள். பிறகு வெல்லம் மற்றும் துணியை யாராவது ஒரு ஏழைக்கு தானமாக கொடுங்கள்.
ஆடி அமாவாசை நாளில் உங்களால் முடிந்த அளவிற்கு வயதானவர்களுக்கு, ஏழைகளுக்கு, ஆதரவற்றவர்கள் போன்றோருக்கு அன்னதானம் வழங்கலாம். குறைந்தபட்சம் நீங்கள் உங்கள் கைகளால் 11 பேருக்காவது அன்னதானம் வழங்கினால், முன்னோர்களின் சாபம் நீங்குவதோடு வாழ்க்கையில் இருக்கும் தோல்விகள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.
அதே போல் நெல்லிக்காய், பால், தயிர், நெய், போன்ற பொருட்களை தானமாக கொடுத்தால் பொருளாதாரத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, லாபம் பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என நம்பப்படுகிறது.