தவெக -வில் இணைகிறாரா ஆதவ் அர்ஜுனாவின் மாமியார்?
இந்திய ஜனநாயக கட்சியின் இணை பொதுச்செயலாளராக பணியாற்றி வந்த லீமாரோஸ் மார்ட்டின் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
கோவை ஜிஎன் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின், இவரது மனைவி லீமாரோஸ்.
இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து வந்த லீமா ரோஸ் விரைவில் கட்சியை விட்டு வெளியேறுவார் என கூறப்பட்டது.

இதன்படி தன்னுடைய உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லாததால், கட்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு வாரங்களில் அதிமுக அல்லது தவெக கட்சியி்ல் இணைய திட்டமிட்டிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட லீமாரோஸ் முடிவு செய்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
கோவையில் அதிமுக-வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால், கோவையில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், லீமா ரோஸ் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சந்தித்து பேசினார், அப்போதே அதிமுகவில் இணையலாம் என கூறப்பட்ட நிலையில் மரியாதை நிமித்தமான சந்திப்பு என விளக்கம் அளித்தார்.
இதற்கிடையே இவரது மருமகன் தவெக-வில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் அங்கு சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
