2026 தேர்தலில் விஜய் போட்டியிடும் தொகுதி எது தெரியுமா?
திமுக- காங்கிரஸ் ஒரு பக்கம், NDA கூட்டணி ஒரு பக்கம் என பரபரப்பான அரசியல் களத்தில் களம் காண்கிறது விஜய்யின் தமிழக வெற்றி கழகம்.
40 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறுவோம் என தவெகவின் முக்கிய புள்ளிகள் தெரிவித்து வருகின்றனர்.
இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைப்போம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது தவெக.

இந்நிலையில் தலைவர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெல்லலாம் என முக்கிய நிர்வாகிகளிடம் தொடர் ஆலோசனை நடந்து வருகிறதாம்.
சென்னையில் இரண்டு தொகுதிகள், திருச்சியில் ஒரு தொகுதி, வட மாவட்டத்தில் ஒரு தொகுதி என இறுதிச் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதில் சென்னையில் விருகம்பாக்கம், வேளச்சேரி தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த தொகுதிகளில் இளைஞர்கள் வாக்கு அதிகம் என்பதாலும், V சென்டிமென்டாகவும் இருப்பதால் ஏதேனும் ஒன்றில் நிற்க வாய்ப்புகள் அதிகமாம்.
அதேவேளை கிறிஸ்துவர்கள் அதிகம் கொண்ட திருச்சி கிழக்கு தொகுதியும் ஆலோசனையில் உள்ளதாம், ஏற்கனவே திருச்சியை இரண்டாம் தலைநகராக அறிவிக்கவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
இதுதவிர செங்கல்பட்டு, விக்கிரவாண்டி உள்ளிட்ட தொகுதிகளிலும் தவெக-வுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகவும் கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
