பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம்!

Government of Tamil Nadu
By Sumathi Feb 02, 2023 08:35 AM GMT
Report

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் சேர ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

பெண் குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரம் தொகையை வைப்புத்தொகையாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தில் வைக்கப்படுகிறது. 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்புத்தொகை செலுத்தப்படுகிறது.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம்! | Aadhaar Number Mandatory For Girl Child Protection

அந்த வைப்புத்தொகைக்கான ஆவணம் குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு விதிகளின்படி, திட்டப்பயனாளிகளுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்படுகிறது. ஆதாருக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில்,

ஆதார் அவசியம்

ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்த போது வழங்கப்படும் ஆவணம் அல்லது ஆதார் எண்ணை பெறுவதற்கான விண்ணப்பத்தின் நகலை வைத்து இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம். அதோடு, புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், பான் அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் அட்டை,

வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அட்டை, புகைப்படத்துடன் கூடிய கிசான் பாஸ்புக், ஓட்டுநர் உரிமம், தாசில்தார் உள்ளிட்ட சான்றொப்ப அதிகாரியால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட எதாவது ஒரு சான்றிதழ் ஆகியவற்றில் ஒன்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.