மின் இணைப்போடு ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? இதோ முழு விவரம்
மின் இணைப்போடு ஆதார் எண்ணை எப்படி இணைப்பது எப்படி? என்பதை இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28ம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்சாரத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான https://www.tangedco.gov.in/ என்ற பக்கத்தில் சென்று பதிவேற்றம் செய்து இணைத்துக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எப்படி இணையதளத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது என்பதை பார்க்கலாம்.
* முதலில் மின்சாரத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான https://www.tangedco.gov.in/ செல்ல வேண்டும்.
* இணையதளத்தின் வலது பக்கத்தில் ஆதார் லிங்க் என்று இருக்கும் அதை க்ளிக் செய்ய வேண்டும்.
* பின்னர் அதில் உங்கள் மின் நுகர்வோர் எண்ணை பதிவிட்டு என்ட்டர் என்ற பட்டனை அழுத்த வேண்டும்.
* இதை தொடர்ந்து உங்கள் மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு ஓடிபி (OTP) அனுப்ப Yes என்ற பட்டனை அழுத்தவும்.
* அடுத்து உங்கள் மின் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு ஓடிபி (OTP) எண் அனுப்பட்டு இருக்கும்.
* பின்னர் உங்களுடைய முழு விவரம் அதில் காண்பிக்கப்படும் அதில் நீங்கள் வீட்டின் உரிமையாளர் என்றால் Owner என்ற ஆப்சனை Select செய்யவும்.
* அல்லது நீங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்குறீர்கள் என்றால் Tenant என்ற ஆப்சனை Select செய்யவும்.
* பின்னர் உங்களுடைய ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். பின்னர் ஆதாரில் உள்ளது போன்று பெயரை பதிவிட வேண்டும்.
* இதையடுத்து Browse என்ற பட்டனை அழுத்தி அதில் உங்களுடைய ஆதார் அட்டையின் புகைப்படத்தை 500KB-க்குள் இருக்குமாறு வைத்து இணைக்க வேண்டும்.
* பின்னர் கீழே உள்ள Submit என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
* இதையடுத்து உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டதற்கான Acknowledgement திரையில் காட்டப்படும்.