வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு - திமுகவுக்கு உடன்பாடில்லை!
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் நம்பரை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆலோசனைக்கூட்டம்
சென்னை, தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி இன்று தொடங்குகியது. இப்பணிகளை 2023 மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்கும் வகையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
ஆதார் எண் இணைப்பு
இதற்கென '6 பி' என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையிலும்,
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையிலும் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் பல குளறுபடிகள் உள்ளது.
ஆர்.எஸ் பாரதி
இதற்கு திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு கெடுவது, அரசியல் கட்சிகளுக்குள் வாக்குவாதங்கள், வாக்குச்சாவடிகளில் தகராறுகள் உள்ளிட்ட பிரச்சனைகள் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடியால்தான்.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் திமுகவுக்கு உடன்பாடில்லை. ஏனெனில், 5 கோடி போலி ஆதார் அட்டை பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழிநுட்பதுறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்காளர்களின் பிறப்பு, இறப்பு, மாற்றம் போன்ற பிரச்சனைகளை தேர்தல் ஆணையம் நேரடியாக முறையிட்டு சீர் செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்படுள்ளதாக கூறினார்