மக்களே இன்னைக்குதான் கடைசி உடனே செய்யுங்க : பான், ஆதாரை ஆன்லைனில் இணைக்க சுலப வழி இதோ
ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டன. கடைசியாக பான்-ஆதார் எண் இணைப்புக்கு காலக்கெடு 2022ம் ஆண்டு மார்ச் 31-ம்தேதிவரை நீட்டிக்கப்பட்டது. அந்தக் காலக்கெடுவும் இன்றுடன் முடிகிறது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி தேதி நாள். ஏப்ரல் 1, 2022 முதல் 3 மாதங்கள் வரை ரூ.500 உடன் கூடிய அபராதத்துடனும் அதற்கு பிறகு ரூ.1000 த்துடன் கூடிய அபராதத்துடன் மட்டுமே ஆதார் எண்ணை இணைக்க முடியும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதேநேரம் வங்கிகளிலேயே பலருக்கு பான் கார்டும் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டு விடுகிறது. இதுபோன்ற சமயங்களில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அவை இணைக்கப்பட்டுள்ளதே தெரிவதில்லை.
எனவே நீங்களாகவே ஆன்லைன் மூலமாக ஆதாரும் பான் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா என்று பரிசோதித்துப் பார்ப்பது நல்லது. பான் மற்றும் ஆதாரை ஆன்லைனில் இணைப்பது எப்படி? பான்-ஆதாரை இணைக்கவோ அல்லது ஏற்கெனவே இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை சரிபார்க்க வருமான வரி மின்-தாக்கல் இணையதளத்தைப் பார்வையிடவும்.
1.வருமான வரித் துறையின் www.incometax.gov.in/ https://www.incometax.gov.in/iec/foportal என்ற முகவரிக்கு செல்லவேண்டும்.
2. தளத்தின் இடது பக்கத்தில், Quick Links என்ற ஆப்ஷன் இருக்கும். இங்கே நீங்கள் 'லிங்க் ஆதார்' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
3. இங்கே நீங்கள் உங்கள் பான் மற்றும் ஆதார் எண் மற்றும் பெயரை உள்ளிட வேண்டும்.
4.உங்கள் பான் மற்றும் ஆதார் ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்தால், already linked என காட்டும். இல்லையென்றால், தகவல் கொடுத்த பிறகு, உங்களுக்கு OTP அனுப்பப்படும். ஓடிபியை உள்ளிட்ட பிறகு, உங்கள் ஆதார் மற்றும் பான் இணைக்கப்படும்.