ஆன்லைனில் ரயில் டிக்கெட் - முன்பதிவு செய்ய இனி புதிய நடைமுறை

Indian Railways
By Sumathi Sep 16, 2025 10:11 AM GMT
Report

டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் முன்பதிவு

ரயில்வே அமைச்சகம் தட்கல் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் என்ற விதியை கொண்டு வந்தது. இதன் மூலம் குறிப்பிட்ட ஆதார் எண்ணில் இருந்து

IRCTC

குறைந்த அளவில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது சாதாரண டிக்கெட் முன்பதிவுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொது டிக்கெட் முன்பதிவு செய்ய, டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5-ஸ்டார் ஹோட்டல் வசதியில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் - முழு விவரம்!

5-ஸ்டார் ஹோட்டல் வசதியில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் - முழு விவரம்!

ஆதார் கட்டாயம்

ஒவ்வொரு நாளும் டிக்கெட் முன்பதிவு அதிகாலை 12.20 முதல் நள்ளிரவு 11.45 வரை நடைபெறும். இந்த அறிவிப்பின்படி அதிகாலை 12.35 வரை ரயில்வே கணக்கில் ஆதார் அப்டேட் செய்தவர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.

indian railways

ஆதார் அப்டேட் செய்யாதவர்கள் அதிகாலை 12.35க்கு மேல் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த விதிமுறை அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.