ஆதார் இலவச அப்டேட் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு
ஆதாரை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
ஆதார்
தற்போது அனைத்து இந்தியர்களுக்கு ஆதார் என்பது முக்கிய ஆவணமாக உள்ளது. வங்கி கணக்கு தொடங்குவது முதல் அரசின் பல சேவைகளை பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தங்களுடைய தகவல்களை இலவசமாக புதுப்பித்துக்கொள்ள பல்வேறு காலக்கெடுக்களை வழங்கியது.
காலக்கெடு நீட்டிப்பு
கடைசியாக, 2024 டிசம்பர் 14தான் இலவசமாக புதிப்பிப்பதற்கான கடைசி தேதி என்று அறிவித்திருந்தது. ஆனால் பலரை இதை தவற விட்டிருக்கும் நிலையில், மத்திய அரசு காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
தற்போது பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த காலக்கெடுவை 2025 ஜூன் 14 வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த இலவச சேவையை, சேவை மையங்களுக்கு செல்லாமல் வீட்டிலிருந்து இணையம் மூலமாகவே myaadhaar இணையதளத்தில் செய்ய முடியும். இந்த இலவச சேவை ஆன்லைன் மூலமே மட்டுமே கிடைக்கும்.
புதுப்பிப்பது எப்படி?
myaadhaar இணைய பக்கத்திற்கு சென்று login செய்ய வேண்டும். அதில் ஆதார் எண் மற்றும் திரையில் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, பின்னர் 'Send OTP' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு வரும் 6 இலக்க OTP எண்ணை உள்ளிட்ட வேண்டும்.
அதில் அதில் ‘Document Update’ என்பதை செலக்ட் செய்து, பெயர், முகவரி போன்று நீங்கள் புதிப்பிக்க விரும்பும் தகவல்களை தேவையான ஆவணங்களை வழங்கி புதுப்பிக்கலாம். உங்கள் புதுப்பிப்பு கோரிக்கையைச் சமர்ப்பித்தவுடன், உங்கள் புதுப்பிப்பின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கப் பயன்படும் புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) SMS மூலம் உங்களுக்கு அனுப்பப்படும்.
2025 ஜூன் 14 பின்னர் செய்யப்படும் மாற்றங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.