பள்ளி மாணவியை போதைக்கு அடிமையாக்கி சீரழித்த கொடூரம்
பள்ளி மாணவியை போதைக்கு அடிமையாக்கி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
சென்னை, தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சமீபமாக பள்ளியில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அப்போது மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆசிரியர்கள் விசாரித்துள்ளனர்.
அதில், மாணவியை அவரது வீட்டு உரிமையாளர் மகன் விக்கி (22) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு விக்கியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் மாணவியை விக்கி தனது பைக்கில் அடிக்கடி அழைத்து வந்துள்ளார்.
போதைக்கு அடிமை
இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் மாணவியை அவரது நண்பன் வீட்டுக்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்துள்ளார். தொடர்ந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபோல பலமுறை செய்துள்ளார். ஒருக்கட்டத்தில் மாணவி எதிர்ப்பு தெரிவித்த போது,
பெற்றோரை கொன்றுவிடுவதாகவும், போதை பவுடரை பயன்படுத்தியதை வெளியில் சொல்லி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். அதன் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளனர்.
மேலும், ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் விக்கி, வீட்டு ஓனர் பையன் என்பதால் இவர்கள் பழகுவதை மாணவியின் வீட்டில் பெருசாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.