17 வயது சிறுமியை 10 நாட்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை - தாய் உடந்தை!

Tamil nadu Sexual harassment Child Abuse Crime
By Sumathi Dec 06, 2022 05:36 AM GMT
Report

தாயின் உதவியுடன் 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

17 வயது சிறுமி

அரியலூர்,ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன்- சாந்தி தம்பதியர். இவர்களின் மகன் ஜெயக்குமார். கூலி தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை,

17 வயது சிறுமியை 10 நாட்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை - தாய் உடந்தை! | A Youth Raped 17Yearold Girl Help Of His Mother

10ஆம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து காதலிக்க வந்ததாக கூறப்படுகிறது. தற்பொழுது அந்த சிறுமி 12ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். அவரை ஜெயக்குமார் தொடர்ந்து காதலிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை

மேலும் சிறுமியை கட்டாயப்படுத்தி தனது பைக்கில் கடத்திச் சென்று ஜெயக்குமாருக்கு சொந்தமான முந்திரி காட்டில் தனி வீட்டில் வைத்து கடந்த பத்து நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதற்கு அவரது தாய் சாந்தியும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் மகளை காணவில்லை என புகாரளித்துள்ளனர். இந்நிலையில் 10 நாட்களுக்குப் பிறகு தாமாகவே வீடு வந்த சிறுமி நடந்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அதன் அடிப்படையில் ஜெயக்குமார் மற்றும் அவரது தாய் சாந்தி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.