இன்ஸ்டா reels மோகம்; 100 அடி உயரத்தில் இருந்து குதித்த இளைஞர் - அடுத்து நடந்த விபரீதம்!
இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
reels மோகம்
ஜார்க்கண்ட் மாநிலம், ஜிர்வபரி பகுதியில் வசிப்பவர் இளைஞர் தஜிப் (18). இவர் தனது நன்பர்களுடன் அதே பகுதியில் உள்ள ஒரு ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். அங்கு அவருடைய நண்பர்கள் சிலர் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுப்பதற்காக தஜிப் 100 அடி உயரத்தில் இருந்து ஏரிக்குள் குதித்துள்ளார்.
இதை கூட இருந்தவர்கள் வீடியோவும் எடுத்துள்ளனர். அவரோடு ஒரு சில இளைஞர் குதித்தனர். ஆனால் தஜிப் மட்டும் அவர்களை விட்டு வெகுதொலைவே உள்ள பகுதியில் ஏரிக்குள் குதித்தார். குதித்த வேகத்தில் ஆழமாக தண்ணீரில் மூழ்கினார்.
குதித்த இளைஞர்
மூழ்கிய தஜிப் வெகுநேரமாகியும் திரும்பாததால் பதற்றமடைந்த அவரது நண்பர்கள் நீந்தி சென்று தஜிப்பை தேடியுள்ளார். ஆனால், தஜிப் ஏரியின் ஆழத்தில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் ஏரியில் மூழ்கிய தஜிப்பின் உடலை மீட்டனர்.
மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. அதே சமயத்தில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதற்காக 100 அடி உயரத்தில் இருந்து ஏரிக்குள் குதித்த தஜிப் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.