பிரபல டிவி சீரியல் நடிகை தூக்கு போட்டு தற்கொலை - போலீசில் சிக்கிய கடிதம்... - ரசிகர்கள் அதிர்ச்சி..!
பாலிவுட்டில் பிரபல இளம் டிவி சீரியல் நடிகை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை வைஷாலி தாக்கர்
‘ஏ ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹை’ என்ற இந்தி சீரியல் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை வைஷாலி தாக்கர்.
இதனையடுத்து, ‘சசுரால் சிமர் கா’, ‘ஏ வாதா ரஹா’ உள்பட சீரியல்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் 14 நிகழ்ச்சி புகழ் நிஷாந்த் மல்கானியுடன் சேர்ந்து ‘ரக்ஷாபந்தன்’ என்ற நிகழ்ச்சியில் வந்தது தான் வைஷாலியின் கடைசி ப்ராஜெக்ட்.
தற்கொலை
இந்நிலையில், கடந்த ஓராண்டு காலமாக இந்தூரில் வாழ்ந்து வந்த வைஷாலி, தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வைஷாலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொள்ளும் முன்பு வைஷாலி எழுதிய கடிதத்தை போலீசார் கையில் சிக்கியுள்ளது.
அந்த கடிதத்தை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் காதல் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வைஷாலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.