துரிதமாக செயல்பட்ட ஓட்டுநர்; அரசு பேருந்திலேயே பிரசவம் - அடுத்து நடந்தது என்ன?
திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் பெண் ஒருவர் அரசு பேருந்திலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
பிரசவ வலி
கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து 37 வயது நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவருடன் கோழிக்கோடு நோக்கி அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு திடீரென வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அந்த பேருந்தின் ஓட்டுநர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பேருந்தை கொண்டு சென்றுள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமானதால் பேருந்திலிருந்து மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்ல போதிய நேரம் இல்லாமல் போயுள்ளது.
பெண் குழந்தை
அதனால் பேருந்திலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் பேருந்து நிற்கும் இடத்திற்கே கொண்டு வரப்பட்டது. பின்னர் மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் பேருந்துக்குள் சென்று பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனர்.
அப்போது அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்லப்பட்ட தாயும், சேயும் நலமாக உள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.