விவாகரத்தை அறிவித்த ஏ.ஆர் ரஹ்மான்..அடுத்த நொடியில் கணவரை பிரிந்த பிரபல பாடகி- இதுதான் காரணமா?
ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரைப் பிரிவதாகத் தெரிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏ.ஆர் ரஹ்மான்
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம்வருபவர் ஏ.ஆர்.ரகுமான்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.தனது இசை மூலம் 2 ஆஸ்கார் விருது வாங்கி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானுவுடன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். திருமணமாகி 29 ஆண்டுகள் கடந்த நிலையில் கணவர் ஏ.ஆர் ரகுமானை விட்டுப் பிரிவதாக மனைவி சாய்ரா அறிவித்தார். ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், பதட்டங்களும் சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கிவிட்டது.
கணவர் ஏ.ஆர். ரஹ்மானை விட்டுப் பிரிவதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளேன். உறவில் ஏற்பட்ட உணர்ச்சிப்பூர்வ முறிவுகளுக்குப் பின் எடுக்கப்பட்ட முடிவு இது என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் ரஹ்மானின் இசைக்குழுவில் பேஸிஸ்டாக இருந்து வரும் மோகிணி என்பர் தனது கணவருடனான விவாகரத்தை அறிவித்துள்ளார்.
பிரபல பாடகி
இந்த முடிவைத் தானும் தனது கணவரும் சேர்ந்து எடுத்துள்ளதாகவும் இதுபற்றி மக்கள் தவறாக எண்ண வேண்டாம் என்றும் மோகினி தெரிவித்துள்ளார். திருமணத்திற்குப் பின் தானும் தனது கணவர் மேக்ஸுல் நல்ல நண்பர்களாக இருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .
மனைவி சாய்ரா பானு விவாகரத்து அறிவிப்பைத் தொடர்ந்து ஏ.ஆர். ரகுமான் எக்ஸ் தள பக்கத்தில் தங்கள் திருமண வாழ்வு முப்பது வயதை எட்டும் என்று நம்பியதாகவும், ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாகத் தெரிவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த பலவீனமான அத்தியாயத்தை நாங்கள் கடந்து செல்லும்போது தனியுரிமைக்கு மதிப்பளித்ததற்காகத் தங்கள் நண்பர்களுக்கு நன்றி என்றும் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ளார்.தற்பொழுது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.