டியூசனுக்கு சென்ற 11 வயது சிறுமி.. வாட்ச்மேன் பாலியல் வன்கொடுமை - கொடூர சம்பவம்

Sexual harassment Maharashtra Child Abuse Crime
By Sumathi Oct 15, 2022 12:50 PM GMT
Report

11 வயது சிறுமியை 58 வயது வாட்ச்மேன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 வயது சிறுமி

மகாராஷ்டிரா, தனேவைச் சேர்ந்தவர் 11 வயது சிறுமி. இவர் பள்ளி முடிந்ததும் மாலை டியூசனுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது சம்பவத்தன்று மாலை வீட்டின் அருகே உள்ள டியூசனுக்கு சென்றுள்ளார். அங்கு ஆசிரியர் வர வெகு நேரமாகியுள்ளது.

டியூசனுக்கு சென்ற 11 வயது சிறுமி.. வாட்ச்மேன் பாலியல் வன்கொடுமை - கொடூர சம்பவம் | A Watchman Sexually Assaulted A Minor Girl

அதற்காக அந்த சிறுமி வெகுநேரமாக காத்திருந்துள்ளார். இந்நிலையில், பக்கத்து பில்டிங் வாட்ச்மேன் இதனை நோட்டமிட்ட நிலையில், சிறுமியிடம் வந்து கேட்டுள்ளார். அதற்கு சிறுமியும் எதற்கு நிற்கிறார் என பதிலளித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை

தொடர்ந்து, அதற்கு அவர் “ இது மிகவும் மோசமான பகுதி. இங்கே நிற்பது ஆபத்து. பாதுகாப்பான இடம் அங்கே ஒன்று இருக்கிறது. அங்கு கொஞ்சம் நேரம் வந்து நில். உன் டீச்சர் வந்ததும் நான் தகவல் கொடுக்கிறேன்” என கூறியுள்ளார். சிறுமியும் அதனை நம்பிச் சென்றுள்ளார்.

அதன்பின் அங்கு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துக் கொண்ட வாட்ச்மேன், சிறுமியிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி மீண்டும் தான் நின்றிருந்த இடத்தில் வந்து பார்த்தபோது அவரது ஆசிரியர் நின்றுள்ளார்.

உடனே அவரிடம் நடந்த கொடுமையை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரிரர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, டியூசன் டீச்சர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் அந்த வாட்ச்மேனை கைது செய்தனர். தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.