உள்ளங்கை அளவில் பிறந்த 350 கிராம் எடை கொண்ட உலகின் மிகச் சிறிய குழந்தை - உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்..!
அமெரிக்காவில் 350 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையை மருத்துவர்கள் போராடி காப்பாற்றியுள்ளனர்.
மருத்துவர்கள் அதிர்ச்சி
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனையில் விஷம் குடித்ததாக கூறி கர்ப்பிணி பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.
கடும் வயிறு வலி காரணமாக அவதிப்பட்டு வந்த அவருக்கு பிப்ரவரி 22ம் தேதி காலை பெண் குழந்தை பிறந்தது.
குழந்தையின் எடை 12.4 அவுன்ஸ் அதாவது 350 கிராம் மட்டுமே. இதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுவரை இவ்வளவு சிறிய குழந்தையை அவர்கள் அதுவரை பார்த்தது கூட இல்லை. குழந்தை உள்ளங்கை அளவுக்கு சிறிதாக இருந்துள்ளது.
குழந்தை பிறந்த போது நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. எனவே தாயும் குழந்தையும் ஆபத்தான நிலையில் இருந்தனர்.
போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்
இதையடுத்து குழந்தைக்கும், தாய்க்கும் மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நலமுடன் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து குழந்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும் போது குழந்தையின் எடை 3.40 கிலோவாக அதிகரித்துள்ளது.
பிழைக்க வைக்க முடியுமா? என்று மருத்துவர்கள் யோசித்த நிலையில் தொடர் சிகிச்சையால் குழந்தை ஆரோக்கியமாக மாறியுள்ளதை கண்டு மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.