உலகின் சுவாரஸ்யமான கிராமம்; இவர்கள் மட்டும்தான் வசிக்கிறார்கள் - ஏன் தெரியுமா?
ஓய்வு பெற்றவர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய சுவாரஸ்யமான ஒரு கிராமத்தை பற்றிய தகவல்.
கேனாக் மில்
பிரிட்டனை சேர்ந்த ஆன் தோர்ன் என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து 'கேனாக் மில்' என்ற கிராமத்தை வடிவமைத்துள்ளார். இந்த அழகான சுற்றுச்சூழலை கொண்ட கிராமமானது 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
கேனாக் மில் கிராமத்தை உருவாக்க ஆன் தோர்னுக்கு 13 ஆண்டுகள் ஆகியுள்ளது. கட்டிடக் கலைஞரான ஆன் தோர்ன் ஓய்வுக்குப் பிறகு அமைதியை விரும்பியுள்ளார். மேலும், அனைவருக்கும் நிம்மதியாக ஒன்றாக வாழக்கூடிய இடத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
இதனிடையே கடந்த 2006-ம் ஆண்டு அவருடைய நண்பர்கள் அனைவரும் ஓய்வுபெற்று தங்கள் சொந்த வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இதனால் தனிமையாக உணர ஆரம்பித்த தோர்ன், அனைவரையும் ஒன்று சேர்த்து இந்த நிலத்தை 1.2 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளார்.
மகிழ்ச்சி இல்லை
அப்போது 8 குடும்பங்கள் மட்டுமே இருந்ததால், தங்கள் ஓய்வூதியம் முழுவதையும் இதற்காக செலவழித்து வந்துள்ளனர். இப்போது இது ஒரு முழு கிராமமாக உள்ளது. அங்கு பலர் தங்கள் முழு குடும்பத்துடன் வாழ்கின்றனர்.
தேனீ வளர்ப்பதும், மண்பாண்டம் தயாரிப்பதும் இங்குள்ள மக்களின் தொழிலாக இருக்கிறது. இதுகுறித்து ஆன் தோர்ன் கூறுகையில் "இங்குள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து உணவு சமைப்பார்கள். எல்லோரும் ஒன்றாக புதிய திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள்.
ஒருவருக்கொருவர் எந்த பணமும் வாங்காமல் கற்பிக்கிறார்கள். வாரத்தில் 4 நாட்கள் முழு கிராமமும் ஒன்றாக பங்கேற்று பேசி, உண்டு மகிழ்கிறார்கள். எல்லோரும் ஒன்றாக நடனமாடுகிறார்கள், பாடல்கள் கேட்கிறார்கள்.
தேவைப்படும்போது ஒருவருக்கொருவர். துணை நிற்கிறோம். நாங்கள் சமூகத்திலிருந்து பிரிந்து இருக்க விரும்பவில்லை. ஆனால், அந்த வாழ்க்கை முறை எங்களுக்கு பிடிக்கவில்லை. அந்த வாழ்வில் மகிழ்ச்சி இல்லை. இங்கு பார்த்தால் எல்லோர் முகத்திலும் சிரிப்பு" என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.