சிறுமியை கண்டித்த பெண்.. அடித்து அரைநிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற திருநங்கைகள் -பகீர் பின்னணி?

Crime Transgender Tirunelveli
By Vidhya Senthil Jan 06, 2025 10:00 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

 திருநங்கை ஒருவர் இளம் பெண்ணை அடித்து அரைநிர்வாணமாக இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி 

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தைப் பிரிந்து இரு மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் தனது மகன் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

திருநங்கை ஒருவர் இளம் பெண்ணை அடித்த சம்பவம்

இதனை அறிந்த இளம்பெண் அச்சிறுமியைத் தனியாக அழைத்துக் கண்டித்தது மட்டுமில்லாமல் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமி தனது திருநங்கையான அண்ணன் இசக்கி பாண்டியிடம் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு திருநங்கை இசக்கி பாண்டி அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடைந்து கிடந்த கழிவு நீர் தொட்டி.. தவறி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழப்பு - பள்ளியில் நடந்தது என்ன?

உடைந்து கிடந்த கழிவு நீர் தொட்டி.. தவறி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழப்பு - பள்ளியில் நடந்தது என்ன?

இதனையடுத்து உச்சக்கட்ட ஆத்திரத்திலிருந்த இசக்கி பாண்டி குலசேகரன்பட்டினத்தில் இருந்து சக கூட்டாளிகளான 3 திருநங்கைகள் போன் செய்து வரவழைத்துள்ளார். அதன் பிறகு இசக்கி பாண்டி உள்ளிட்ட நான்கு திருநங்கைகள் இளம் பெண்ணின் வீட்டிற்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராற்றில் செய்துள்ளனர்.

திருநங்கைகள் 

வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றவே அந்த இளம் பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் பலத்த காயம் அடைந்த இளம் பெண்ணின் உடைகளைக் கிழித்து அரைநிவாணமாக சாலையில் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை அங்கிருந்த மர்ப நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

திருநங்கை ஒருவர் இளம் பெண்ணை அடித்த சம்பவம்

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாக உள்ள நான்கு திருநங்கைகளைத் தேடி வருகின்றனர்.