என்ன கொடுமை சார் இது..பல் துலக்கும்போது Brush-ஐ விழுங்கிய பெண் - பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி!

India Maharashtra Doctors
By Vidhya Senthil Nov 13, 2024 11:36 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

  பெண்ணின் வயிற்றில் சிக்கிய டூத் பிரஷ் எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

மாகாராஷ்ரா 

மாகாராஷ்ரா மாநிலம் புனனேவை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் வழக்கம்போல காலையில் கண்விழித்தது பல் துலக்கிக் கொண்டிருந்தாராம். அப்போது அவர் பல் துலக்குவதற்குப் பயன்படுத்திய டூத் பிரஷ்ஷை கவனக்குறைவால் விழுங்கியுள்ளார்.டூத் பிரஷ் அவரது வயிற்றில் சிக்கிக் கொண்டது.

tooth brush

இதையடுத்து, அவருக்குத் தொண்டையிலும் வயிற்றுப்பகுதியிலும் எரிச்சல் ஏற்பட்டது.இதையடுத்து அந்தப் பெண் டூத் பிரஷ்ஷை விழுங்கிய தகவலை தன் மகளிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர் தன் தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். டூத் ப்ரஷ்ஷை விழுங்கிவிட்டதாகக் கூறியதற்கு மருத்துவர்கள் நம்பவில்லை.

போதையில் தண்டவாளத்தில் ரீல்ஸ் - ரயில் வரும்போது சிக்கிய கார்

போதையில் தண்டவாளத்தில் ரீல்ஸ் - ரயில் வரும்போது சிக்கிய கார்

அதன்பிறகு அந்தப் பெண்ணை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவரது வயிற்றுக்குள் 20 செ.மீ நீளமுள்ள டூத் பிரஷ் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, மருத்துவர்கள் அறுவைசிகிச்சை மூலம் அகற்றுவது குறித்து ஆலோசித்த மருத்துவர்கள், எண்டோஸ்கோப்பி மூலம் பிரஷ்ஷை அகற்றினர்.

Brush-ஐ விழுங்கிய பெண்

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் வயிற்றில் சிக்கிய டூத் பிரஷ்ஷை அகற்ற முதலில் சிரமப்பட்டோம். ஆனால், எண்டோஸ்கோப்பி உதவியுடன் வாய் மூலமாக டூத் பிரஷ்ஷை அகற்றிவிட்டோம். அரை மணி நேரத்தில் இந்த சிகிச்சை முடிந்துவிட்டது என்றால் கொஞ்சம் சவால் நிறைந்ததாகவே இருந்தது.

என்ன கொடுமை சார் இது..பல் துலக்கும்போது Brush-ஐ விழுங்கிய பெண் - பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி! | A Tooth Brush Remove From Lady Esophagitis

தற்போது அந்தப் பெண் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் உலகளவில் இதுவரை 30க்கும் குறைவான நபர்களே இவ்வாறு டூத் பிரஷ்ஷை விழுங்குவதாகவும் அதில் பெரும்பாலானோர் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்..