மறுக்கப்பட்ட வாய்ப்பு; மருத்துவரான 3 அடி இளைஞர் - தன்னம்பிக்கையுடன் கனவை எட்டி பிடித்து சாதனை!
மூன்று அடியே உயரம் கொண்ட இளைஞர் மருத்துவராகியா சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
3 அடி இளைஞர்
குஜராத்தில் உள்ள பாவ் பகுதியை சேர்ந்த கணேஷ் பாரையா என்னும் நபர் 72 சதவீதம் உயர குறைப்பாட்டுடன் பிறந்தவர். 3 அடி உயரம் இருக்கும் கணேஷிற்கு வெகுநாளாகவே மருத்துவராக வேண்டும் என்ற மிக பெரிய கனவு இருந்துள்ளது.
ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் அவரது உயரத்தை மட்டும் வைத்து அவரால் மருத்துவராக இயலாது என்று குறிப்பிட்டுள்ளனர். கணேஷின் உயரம் குறைவாக இருப்பதால் அவசர சிகிச்சையை கையாள இவருக்கு சிரமமாக இருக்கும் என கூறி மருத்தவப் படிப்பிற்கான சேர்க்கை மறுக்கப்பட்டது.
மருத்துவ கனவு
இந்நிலையில், கணேஷிற்கு அவரது பள்ளி முதல்வர் உறுதுணையாக இருந்து, குறையுடன் பிறப்பவர்கள் மருத்துவராகக் கூடாதா? என்ற கேள்வி எழுப்பி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாவ்நாகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் சேர்க்க அனுமதித்து அவருக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
இதையடுத்து, அவர் 2019இல் கல்லூரியில் சேர்ந்து MBBS படிப்பை முடித்துவிட்டு, ஒரு பொது மருத்துவமணையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை நாற்காலி மேல் ஏறி நின்று சிகிச்சை பார்க்கும் மருத்துவர் கணேஷை பொதுமக்கள் அதிசயமாக பார்த்து வியக்கின்றனர்.