காதல் விவகாரம்; எனக்கு இல்லாதது யாருக்கும் இருக்க கூடாது- வாலிபர் செய்த செயல்!
காதலிக்க மறுத்த இளம்பெண்ணையும், அவரது காதலனையும் சுட்டுக் கொன்று வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்
மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்தில் உள்ள ரெஹ்தி கிராமத்தைச் சேர்ந்தவர் அபிஷேக் யாதவ்(26). இவர் கல்லூரியில் அவருடன் படித்த சினேகா ஜாட்(22) என்ற பெண்ணை உயிருக்கு உயிராக ஒருதலை பட்சமாக காதலித்து வந்தார்.
அத்துடன் சினேகாவிடம் அபிஷேக் தனது காதலை ப்ரபோஸ் செய்துள்ளார். ஆனால், அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், சினேகா அதே கல்லூரியில் படிக்கும் அவரது உறவினரான தீபக்கை காதலித்துள்ளார்.
வாலிபர் செய்த செயல்
அவர்கள் அடிக்கடி சந்தித்து வருவதுண்டு. இந்த விஷயம் அபிஷேக்கை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பல ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்த தனது காதலி, வேறு ஓருவரை காதலிப்பதை ஏற்கமுடியாத அவர் தனக்குக் கிடைக்காத காதலி, இன்னொருவருக்கு கிடைக்காது என்று முடிவு செய்தார்.
இதற்கிடையில் கோயிலுக்கு சினேகாவும், தீபக்கும் சென்றுள்ளனர். அவர்களை அபிஷேக் யாதவ் பின் தொடர்ந்துள்ளார். அப்போது, கோபத்துடன் இருந்த அபிஷேக் வழியில் அவர்களை மறித்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே சினேகா, தீபக் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
இதனை பார்த்த அபிஷேக் யாதவ், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலறிந்து வந்த போலீஸாருக்கு மூவரையும் உயிரிழந்தது தெரிய வந்தது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.