Tiktok ரீல்ஸால் ஆத்திரம்..! குஜராத்தில் லைவ் வீடியோவில் தங்கையை சுட்டுக்கொன்ற அண்ணன்..!
தொடர்ந்து வீடியோ ரீல்ஸ் செய்து டிக்டாக்கில் வெளியிட்டு வந்த தங்கையை tiktok எடுத்து கொண்டிருக்கும் போதே அண்ணன் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tiktok மோகம்
இன்றைய இளம் தலைமுறையினர் என்று நாம் குறிப்பிடுவதை தாண்டி பெரியவர்கள் பலருக்கும் tiktok மோகம் அதிகளவில் காணப்படுகிறது.
இந்த செயலி தடை செய்யப்பட்டுள்ள நிலையிலும், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் இன்னும் ரீல்ஸ் செய்து வெளியிட்டு வருவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
சுட்டுக்கொலை
அதன் வெளிப்பாடாக தான், குஜராத்தில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் அமைந்துள்ள குஜராத் மாநிலத்தில், தொடர்ந்து தனது தங்கை ரீல்ஸ் செய்து வந்தது அண்ணனுக்கு கோபத்தை கொடுத்துள்ளது.
Maria Afzal(18) எனப்படும் அந்த இளைஞர் Saba Afzal (14) என்னும் தனது தங்கையை அவர் வீடியோ ரீல்ஸ் எடுத்து கொண்டிருக்கும் போதே சுட்டுள்ளார். இதன் காரணமாக சம்பவ இடத்தியிலேயே மரணமடைந்துள்ளார்.