11-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை - மதுபோதையில் ஆசிரியர் செய்த உச்சகட்ட கொடூரம்!
11-ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11-ம் வகுப்பு
சேலம் மாவட்டம் எடப்பாடியில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இருப்பாளி அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பிரகதீஸ்வரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. அப்போது வகுப்பறைக்கு பிரகதீஸ்வரன் மது அருந்தி வந்ததாகத் தெரிகிறது. மதுபோதையில், சிறப்பு வகுப்புக்கு வந்திருந்த மாணவி ஒருவரிடம் ஆபாசமாகப் பேசி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
ஆசிரியர்
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அழுது கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளார் . அப்போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார் . இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பூலாம்பட்டி காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது புகார் அளித்தனர்.
புகரின்பேரில் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தமிழ் ஆசிரியர் பிரகதீஸ்வரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.