ரூ.52 கோடிக்கு ஏலம்போன ஒரே ஒரு வாழைப்பழம் - வடிவமைப்பாளர் சொல்லும் காரணம் பாருங்க!
டேப் வைத்து ஒட்டப்பட்டிருந்த வாழைப்பழம் ரூ.52.35 கோடிக்கு ஏலம் போனது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
வாழைப்பழம்
இத்தாலியை சேர்ந்த மொரிசியோ கட்டெலன் என்பவர் இந்த டேப் மூலம் சுவரில் ஒட்டிய வாழைப்பழத்தை வடிவமைத்தவர் ஆவார். முன்னதாக இந்த வாழைப்பழம் கடந்த 2019ம் ஆண்டு மியாமி நகரில் உள்ள கலைப்பொருள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
அப்போது பலரின் கவனத்தை இது ஈர்த்தாலும் விலை போகாமல் இருந்தது.தற்போது நியூயார்க் நகரின் சவுத்பே ஏல மையத்தில் ' காமெடியன்' என்ற தலைப்பில் வைக்கப்பட்டு இருந்த இந்த வாழைப்பழம் கவனத்தையும், விமர்சனத்தையும் பெற்றது.
வடிவமைப்பாளர்
இதை உருவாக்கிய மொரிசியோ கட்டெலன் இது குறித்து பேசுகையில், ' காமெடியன்' அடிப்படை சாரம்சம் அதன் கருத்தில் தான் அமைந்துள்ளதே தவிர வாழைப்பழத்தில் அல்ல. இதனை வாங்குபவர்கள், வாழைப்பழத்தையும் டக் டேப்பை மட்டும் வாங்கவில்லை.
அதனை மறு உருவாக்கம் செய்யும் அறிவுசார் உரிமையையும் பெறுகின்றனர் என்று தெரிவித்தார். இந்த நிலையில், கிரிப்டோகரன்சி நிறுவனத்தை சேர்ந்த ஜஸ்டின் சென் என்பவர் அந்த வாழைப்பழத்தை சுமார் 6.2 மில்லியன் டாலருக்கு
( இந்திய மதிப்பில் ரூ.52.35 கோடி) ஏலத்தில் வாங்கியுள்ளார். ஒரு வாழைப்பழம் ரூ.52.35 கோடிக்கு ஏலம் போனது உலகின் பல முன்னணி கலைஞர்களின் மத்தியில் பெரும் பேசுப்பொருளாக மாறியது.