வாழைப்பழத்தை பார்த்தாலே அலறும் பெண் அமைச்சர் - ஏன் தெரியுமா?
பெண் அமைச்சர் ஒருவர் வாழைப்பழத்தை கண்டு பயப்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பவுலினா பிராட்பெர்க்
மனிதர்களுக்கு பொதுவாக சில பயங்கள் இருக்கும். உயரத்தை கண்டு பயப்படுவது Acrophobia. இருட்டை கண்டு பயப்படுவது Nyctophobia. நாயை கண்டுபயப்படுவது Phonophobia என பலவிதமான போபியா(phobia) உள்ளது.
ஸ்வீடன் நாட்டின் பாலின சமத்துவ துறை அமைச்சராக இருப்பவர் பவுலினா பிராட்பெர்க்(paulina brandberg). இவருக்கு வாழைப்பழத்தை கண்டாலே பயப்படும் bananaphobia உள்ளது.
வாழைப்பழ அலர்ஜி
bananaphobiaவால் பாதிக்கப்பட்டுள்ள பவுலினா பிராட்பெர்க் தனது அலுவலகத்தில், கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் வாழைப்பழம் எனது கண்ணில் படவே கூடாது என தனக்கு கீழே பணி புரிபவர்களுக்கு கண்டிப்பான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் பவுலினா, ஊழியர்களுக்கு அனுப்பிய ஈமெயிலில் "நான் சபாநாயகர் அலுவலகத்தில் கலந்துகொள்ள உள்ள மீட்டிங்கில் எந்த வாழைப்பழமும் இருக்கக்கூடாது, அவை எனக்கு அதிக அலர்ஜி" என தெரிவித்துள்ளார்.
"நாங்கள் கான்பரன்ஸ் இடத்தை முற்றிலுமாக பாதுகாப்பு செய்து விட்டோம், எந்த வாழைப்பழங்களும் இங்கு இல்லை" என ஊழியர்கள் அமைச்சருக்கு ஈமெயில் உள்ளனர்.
பிரதமர் ஆதரவு
இது போன்று அமைச்சர் அனுப்பிய பல ஈமெயில்கள் இணையத்தில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பேசியுள்ள ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டெர்சன், பவுலினாவின் போபியாவால் அரசு நிர்வாக செயல்பாடுகளில் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
போபியாக்களால் அவதிப்படும் மனிதர்களையும் அவர்களின் சிரமங்களையும் நான் மதிக்கிறேன். கடினமாக உழைக்கும் அமைச்சரை மக்கள் கிண்டல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார்.