வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு - 9 பேர் பரிதாப பலி
அமெரிக்காவில் உள்ள வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் என்ற நகரத்தில் உள்ள வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு நடத்தி நபரும் உயிரிழந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெக்சாஸ் மாகாணத்தில் எந்த வித பயிற்சியும் உரிமமும் இன்றி யார் வேண்டும் எனாலும் துப்பாக்கி வைத்துக் கொள்ள சட்டம் அனுமதி அளிக்கிறது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருவதால் துப்பாக்கி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan