தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும் வினோத வியாதி; கடனால் மூழ்கி தவிக்கும் பெண் - ஷாக் பின்னணி!

England World Social Media
By Swetha Jun 08, 2024 07:34 AM GMT
Report

பெண் ஒருவர் தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும் வினோத வியாதியால் அவதிப்படுகிறார்.

வினோத வியாதி 

பெண்கள் பொதுவாக ஷாப்பிங் செய்வது வழக்கம் தான். அதுவும் இந்த டிஜிட்டல் யுகத்தில் தேவைக்கு அதிகமாகவே நம்மில் பலர் பொருட்களை வாங்கி குவித்து கொண்டு இருக்கிறோம். ஒரு சிலர் தான் கவலையாகவோ, அல்லது அசம்பாவிதம் ஏதேனும் நடந்திருந்தால் அவர்கள் ஷாப்பிங் செய்வது மூலம் ஆறுதல் தேடுவார்கள்

தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும் வினோத வியாதி; கடனால் மூழ்கி தவிக்கும் பெண் - ஷாக் பின்னணி! | A Rare Disease Of Shopping While Sleeping

என்று கேள்விபட்டிருப்போம்.ஆனால், பெண் ஒருவருக்கு தூக்கில் ஷாப்பிங் செய்யும் அறிய வகை வியாதி உள்ளது என்றால் நம்ப முடியுமா? அதாவது இங்கிலாந்தைச் சேர்ந்த கெல்லி கிநைப்ஸ்(42) என்ற பெண் தூக்கத்தில் தன்னை அறியாமலேயே தனக்கு தேவையில்லாத பொருட்டாக்களையெல்லாம் ஆன்லனில் ஷாப்பிங் செய்து வருகிறார்.

இதனால் அவருக்கு ரூ.3 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது. இதனை மருத்துவர்கள் பரிசோத்தித்துப் பார்த்தபோது, கெல்லிக்கு பாராசோம்னியா என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாராசோம்னியா இருப்பவர்கள் தூக்கத்தில் எழுந்து சுயநினைவு இல்லாமலேயே நடப்பது, பேசுவது, சாப்பிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர்.

என்னது உடலில் தானாக மதுபானம் சுரக்கிறதா? அறியவகை நோயால் பாதித்த நபர்!

என்னது உடலில் தானாக மதுபானம் சுரக்கிறதா? அறியவகை நோயால் பாதித்த நபர்!

தவிக்கும் பெண்

தூக்கத்தில் மூளையின் ஒரு பகுதி மட்டும் செயல்படுவதால் இப்படி நடக்கிறது. இந்த நோய் கெல்லியின் விஷயத்தில் ஒரு படி மேலே சென்று ஆன்லைன் ஷாப்பிங் செய்ய வைத்துள்ளது. கெல்லி தூக்கத்தில், பிளாஸ்டிக்கால் ஆன முழு பேஸ்கெட்பால் செட்டப், நெட், பெயிண்ட் வாளிகள், புத்தகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள்,

தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும் வினோத வியாதி; கடனால் மூழ்கி தவிக்கும் பெண் - ஷாக் பின்னணி! | A Rare Disease Of Shopping While Sleeping

குளிர்சாதன பிரிட்ஜ், மேசைகள், மிட்டாய்கள் என தனக்குத் தேவைப்படாத பொருட்களையெல்லாம் வாங்கிக் குவித்துள்ளார். தனது வாங்கி விவரங்கள் ஏற்கனேவே ஆன்லனில் பதிவாகியுள்ளதால் தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும்போது பணம் தானாகவே சென்று விடுகிறது என்றும், தனிப்பட்ட வங்கி விவரங்களை தூக்கத்தில்

தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும் வினோத வியாதி; கடனால் மூழ்கி தவிக்கும் பெண் - ஷாக் பின்னணி! | A Rare Disease Of Shopping While Sleeping

 யாருக்காவது சேர் செய்து விடுவதால் மோசடி நிகழும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக விரக்தியில் தெரிவிக்கிறார் கெல்லி. அவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், முதல் குழந்தை பிறந்தபோது இந்த வியாதிக்கு ஆளாகியுள்ளார். மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாலும் அது பெரிய அளவில் பயனளிக்கவில்லை என்பதால் செய்வதறியாமல் கெல்லி சோகத்தில் உள்ளார்.