மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்.. கார் பேனட்டில் வைத்து 3 கி.மீ இழுத்து சென்ற கொடூரம்!

Viral Video India Maharashtra
By Swetha Dec 04, 2024 02:30 PM GMT
Report

நபர் ஒருவரை கும்பல் ஒன்று கார் பேனட்டில் வைத்து 3 கி.மீ இழுத்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

இளைஞர்.. 

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்தவர் கமலேஷ் பாட்டில் (23). இவரும், இவரது நண்பர்களான ஹேமந்த் மலாஷ்கர் (26) மற்றும் பிரபமேஷ் தரடே (22) ஆகிய மூவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் ஆடி காரில் சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்.. கார் பேனட்டில் வைத்து 3 கி.மீ இழுத்து சென்ற கொடூரம்! | A Person Was Dragged For 3Km On Audis Bonnet

பிம்ப்ரி சின்ச்வாட் டவுன்சி என்ற பகுதியில் கார் பயணித்தப்போது அவ்வழியாக சென்று கொண்டு இருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி உள்ளது. இதனால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஜக்கரியா மேத்யூ என்ற நபர் காரை நிறுத்தி உள்ளே இருந்த மூவரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

1M கொண்டாட்டம்; ஆபத்தான முறையில் கார் பேனட் மேல் பயணம் செய்த பெண் - அதிரடி காட்டிய போலீசார்!

1M கொண்டாட்டம்; ஆபத்தான முறையில் கார் பேனட் மேல் பயணம் செய்த பெண் - அதிரடி காட்டிய போலீசார்!

கார் பேனட்டில்..

அப்போது கமலேஷ் பாட்டில் மற்றும் அவரது நண்பர்கள் என 3 பேரும் சேர்ந்து ஜக்கரியா மேத்யூவை அடித்து தாக்கினர். மேலும், மேத்யூவை கார் பேனட்டில் தூக்கி போட்டு சுமார் 3 கிலோ மீட்டருக்கும் மேல் இழுத்து சென்றுள்ளனர்.

இது தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து போலீசார் கமலேஷ் பாட்டில் உள்பட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.