1M கொண்டாட்டம்; ஆபத்தான முறையில் கார் பேனட் மேல் பயணம் செய்த பெண் - அதிரடி காட்டிய போலீசார்!

India Instagram Punjab
By Jiyath Aug 07, 2023 01:06 AM GMT
Report

சாலையில் ஆபத்தான முறையில் கார் மீது அமர்ந்து பயணம் செய்த பெண்ணின் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆபத்தான முறையில் பயணம்

ரீல்ஸ் என்ற பெயரில் சிலர் பொது இடங்களில் அடிக்கடி அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். போக்கு வரத்து சிக்னலில் நடனமாடுவது, நாடு ரோட்டில் தண்ணீர் ஊற்றி குளிப்பது, காதலியை தூக்கிக்கொண்டு பேருந்து நிலையத்தில் வளம் வருவது, ஆபத்தான முறையின் வாகனங்களில் ஸ்டண்ட் செய்வது போன்ற முக சுழிக்கும் வகையில் உள்ள செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள்.

1M கொண்டாட்டம்; ஆபத்தான முறையில் கார் பேனட் மேல் பயணம் செய்த பெண் - அதிரடி காட்டிய போலீசார்! | Punjab Woman Shoots Video On Bonnet Of Car Ibc

இது போன்ற செயல்கள் இறுதியில் உயிர் போகும் அளவிற்கு கூட சென்றுவிடுகிறது. இவர்களுக்கு காவல் துறையினர் எச்சரிக்கையும் விடுத்து வருகிறார்கள். அந்த வகையில் பஞ்சாப் மாநிலம் ஹோசியார்புர் மாவட்டத்தை சேர்ந்த 'கவுரி விர்டி' என்ற இளம்பெண் தனது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்ள் பதிவிடுவதன் மூலம் பிரபலமாக உள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு எஸ்யூவி காரின் பேனட் மேல் அமர்ந்து ஜலந்தர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டார். தனது இன்ஸ்டாகிராமில் மில்லியன் பாலோவர்ஸ்களை அடைந்ததை கொண்டாடுவதற்கு '1' 'M' என்ற தங்க நிற காற்று பலூன்களை கையில் வைத்து நடனமாடியபடி பயணித்தார்.

கார் பறிமுதல்

பதிவிட்ட சிறிது நேரங்களிலேயே இந்த வீடியோ அதிகப்படியான பார்வையாளர்களையாம், லைக்குகளையும் பெற்று வைரல் ஆனது. இந்நிலையில் வாகனத்தின் என் மூலம் காவிரியை அடையாளம் கண்ட போலீசார் அவரது காரை பறிமுதல் செய்துள்ளனர். வாகனத்தில் பயணம் செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பின்னர் அதுகுறித்து போலீசார் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். மேலும் பறிமுதல் செய்த காரின் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு அது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளது.