மாரடைப்பால் சுயநினைவை இழந்த நபர் .. உயிர்பிழைத்து சொன்ன வார்த்தை - மிரண்டு போன மருத்துவர்கள்!
மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் கூறிய வார்த்தை மருத்துவர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சீனா
இன்றைய வேகமான கார்ப்பரேட் வாழ்க்கையில் ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையை அடைவது கடினமாக உள்ளது. நம்மில் பலருக்குச் சிறிய காய்ச்சல் வந்தால் கூட வேலைக்குச் செல்ல மாட்டோம்.சிலர் வேலைக்குச் செல்ல விருப்பம் இல்லாதவர்கள் காய்ச்சல் வந்ததாகக் கூறி விடுமுறை எடுப்பர்.
ஆனால் மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் கூறிய வார்த்தை மருத்துவர்களையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்ஷாவில் பிப்ரவரி 4ஆம் தேதி 40 வயதுடைய ஒரு நபர் வேலைக்குச் செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது.
மாரடைப்பு
இதனைக் கண்ட சக பயணிகள் மருத்துவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.உடனடியாக விரைந்து மருத்துவர்கள் சிபிஆர் உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்தனர். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு சுயநினைவு பெற்றார். அப்போது அந்த நபர் "நான் வேலைக்கு விரைந்து செல்ல இந்த அதிவேக ரயிலில் தான் செல்ல வேண்டும்.
இது ஒரு சாதாரண மயக்கம்தான், மருத்துவமனைக்கெல்லாம் செல்ல வேண்டாம்.வேலைக்கு போக்கனும் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.