இரண்டே மணி நேரம்தான் - பெண்ணாக மாறிய ஆண்! என்ன நடந்தது?

Tamil nadu Chennai
By Sumathi Aug 16, 2022 12:37 PM GMT
Report

பல்லாவரத்தில் நடைபெற்ற மேக்கப் மராத்தானில் ஆண் பெண்ணாக மாறிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

ஒப்பனை போட்டி

அப்துல் கலாம் உலக சாதனை ஒப்பனை போட்டியானது நேற்று, 76 ஆவது சுதந்திர தினத்தன்று பல்லாவரத்தில் கோலாகலமாக நடைப்பெற்றது. இந்தப்போட்டியினை ரைசிங் ஸ்டார்ஸ் மற்றும் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகம் இனைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இரண்டே மணி நேரம்தான் - பெண்ணாக மாறிய ஆண்! என்ன நடந்தது? | A Man Who Turned Into A Woman In Two Hours

இந்நிகழ்ச்சியானது வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிலையில் 90 ஒப்பனைகள் கலைஞர்களை போட்டியாளராகக்கொண்டு பல்வேறு விதமான ஒப்பனை திறமைகளை வெளிப்படுத்தி கண்கவர் நடைபாதை( spectacular ramp walk) மூலம் ஆரவாரத்துடன் அரங்கேற்றப்பட்டது.

அசத்திய அகத்தியா

இப்போட்டியில் 2 மணி‌நேரத்தில் ஒப்பனைகளை முடிக்கவேண்டும் என விதிமுறை கூறப்பட்டிருந்த நிலையில் 90 ஒப்பனை கலைஞர்களுள் ஒரு‌ ஆண் மாடலை ஒப்பனை திறமை மூலம் பெண்னாக மாற்றி வெற்றிப்பெற்றார் அகத்தியா.

[

அகத்தியாவின் பெயர் அப்துல் கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இந்த ஒப்பனை நிகழ்ச்சியில் பிரபல ஒப்பனை கலைஞர் செல்டன், திரையுலக பிரபலம் பிரியதர்ஷினி, எழுத்தாளர் லதா சரவணன், வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி பிரீதா கணேஷ் ஆகியோர் நடுவர்களாக கலந்துகொண்டனர்.

இரண்டே மணி நேரத்தில் ஆணை மேக்கப் மூலமாக பெண்ணாக மாற்றிய அகத்தியாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.