சூப்பர் பவர்காக சித்திரவதை; கைகுழந்தை பலி- உணவளிக்காமல் சூரிய ஒளியில் வைத்த influencer!

Death Russia Social Media
By Swetha Apr 18, 2024 07:12 AM GMT
Report

இன்ஃப்ளுயென்ஸர் மாக்சிம் லியுட்டி தனது ஒரு மாதக் குழந்தைக்கு உணவு ஏதும் கொடுக்காமல் சூரிய ஒளியில் வைத்துள்ளார்.

சூப்பர் பவர்காக சித்திரவதை

ரஷ்யாவைச் சேர்ந்த மாக்சிம் லியுட்டி என்பவர் ஒரு வீகன் இன்ஃப்ளுயென்ஸர்.இவரது மனைவி ஒக்ஸானா மிரோனோ ஆவார். அண்மையில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சூப்பர் பவர்காக சித்திரவதை; கைகுழந்தை பலி- உணவளிக்காமல் சூரிய ஒளியில் வைத்த influencer! | A Man Who Killed A One Month Old Baby Without Food

இதையடுத்து அவர், காஸ்மோஸ் என்ற தன் ஒரு மாத குழந்தையைச் சூரிய ஒளியில் வைத்திருந்தால் `சூப்பர்ஹுயூமன் பவர்' கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையில் குழந்தையை வெயிலில் வைத்திருக்கிறார். தாய்ப்பால் கொடுக்கக்கூடாது, சூரிய ஒளி குழந்தைக்கு உணவளிக்கும் என்று சொல்லி தன் மனைவியை தடுத்து நிறுத்தியுளார்.

இப்படியாக தொடர்ந்து குழந்தையை வைத்துச் சோதனையை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், குருக்களும், ரிஷிகளும் பழங்காலத்தில் உணவு சாப்பிடாமல் தவமிருந்து வெறும் பிராண சக்தியின் மூலம் மட்டுமே வாழ்ந்தனர் என்று சொல்லப்படும் கூற்றை நம்பி அவர் தனது குழந்தைக்கு முயற்சி செய்திருக்கிறார்.

கொதிக்கும் சாம்பாரில் விழுந்த குழந்தை பலி - திடுக் சம்பவம்

கொதிக்கும் சாம்பாரில் விழுந்த குழந்தை பலி - திடுக் சம்பவம்

கைகுழந்தை பலி

அதன்படி உடலின் ஆன்மிக ஆற்றலை மேம்படுத்த வீகன் பிராணா டயட்டை பின்பற்றியுள்ளார்.குறிப்பாக பெர்ரி போன்ற உணவுகளை மட்டும் அந்த பிஞ்சுக் குழந்தைக்கு கொடுத்திருக்கிறார். அதோடு குழந்தையைப் பலப்படுத்தும் என குளிர்ந்த நீரில் குளிக்க வைத்திருக்கிறார்.

சூப்பர் பவர்காக சித்திரவதை; கைகுழந்தை பலி- உணவளிக்காமல் சூரிய ஒளியில் வைத்த influencer! | A Man Who Killed A One Month Old Baby Without Food

இதன் காரணமாக உடல்நிலை மோசமடைந்ததை அந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நிமோனியாவால் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

வேண்டுமென்றே தீவிரமான உடல் தீங்கு விளைவித்த குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்ட அவர் தன் மகனைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். பிறகு நீதிபதிகள் அவருக்கு எட்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 900 பவுண்டுகள் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.