சுடுகாட்டில் குழி தோண்டி இருக்கும் விநோத விரதம்!

Tamil nadu Festival
By Sumathi Sep 22, 2022 10:27 AM GMT
Report

சுடுகாட்டில் 6 அடி குழி தோண்டி அதில் அம்மனுக்கு விரதமிருப்பதாக நபர் ஒருவர் வசித்து வருகிறார்.

கேன்சர்

நெல்லை, திசையன்விளை அருகே சங்கனாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன்(46). இவர் சுமார் 35 ஆண்டுகளாக வேடமணிந்து குலசை முத்தாரம்மனை வணங்கி வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இவருக்கு தொண்டை பகுதியில் கேன்சர் ஏற்பட்டுள்ளது.

சுடுகாட்டில் குழி தோண்டி இருக்கும் விநோத விரதம்! | A Man Who Digs A 6 Foot Pit In The Crematorium

இதனால் சிகிச்சை எடுத்த அவருக்கு பலன் கிட்டவில்லை. இந்நிலையில், அம்மனை தீவிரமாக வணங்கி வந்துள்ளார். அதில் அவருக்கு கேன்சர் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. அதற்கு அம்மனுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக 4 ஆண்டுகளாக சுடுகாட்டு காளி வேடம் அணிந்து விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்.

அம்மனுக்கு விரதம்

இந்த வருடம் வரும் 26ஆம் தேதி முத்தாரம்மன் கோவில் திருவிழா தொடங்குகிறது. இதனால் சந்திரன் சுடுகாட்டில் 6 அடி அளவில் நீளமான பள்ளம் தோண்டி குடில் அமைத்து 21 நாட்கள் விரதம் இருந்து வருகிறார்.

சுடுகாட்டில் குழி தோண்டி இருக்கும் விநோத விரதம்! | A Man Who Digs A 6 Foot Pit In The Crematorium

இருவேளை பூஜை நடத்தும் இவர் பூஜைக்கு முன்னதாக குளிப்பதற்காக மட்டுமே வெளியே வருகிறார். இது குறித்து சுடுகாட்டு காளி சந்திரன் கூறியதாவது : எனக்கு வந்த தீராத நோய் கேன்சர் என்னை மரண வாசலில் கொண்டு போய் விட்டது.

சுடுகாட்டில் விரதம்

அந்த நேரத்தில் மருத்துவர்களும் உறவினர்களும் என்னை கைவிட்ட நேரத்தில் என்னை காப்பாற்றியது குலசை முத்தாரம்மன் தான். நான் 35 ஆண்டுகளாக குலசை முத்தாரம்மனின் பக்தர் தான். ஆனால் நான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட போது முத்தாரம்மன்னை மட்டுமே நம்பி இருந்தேன் என் நம்பிக்கை வீண் போகவில்லை.

அதனால் தான் உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக நினைத்து சுடுகாடு வரை சென்று உயிருடன் திரும்பியதால் முத்தாரம்மனின் ஒரு அவதாரம் சுடுகாட்டு காளி ஆகவே தான் கடந்த 4 ஆண்டுகளாக சுடுகாட்டு காளி வேடமணிந்து 21 நாட்கள் அன்ன ஆகாரம் உண்ணாமல்

சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்ய தோண்டப்படும் குழி போன்று குழி தோண்டி அந்த குழியில் தங்கி இரவு பகல் வசித்து வருகிறேன் என்று கூறினார்.