பழங்கால வீடு..மேற்கூரையில் கிடைத்த பெட்டி- என்ன இருந்ததுனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
பழங்கால வீட்டில் இருந்து ஒரு ரகசிய பெட்டிகிடைத்துள்ளது.
பழங்கால வீடு..
பெல்ஜியத்தை நேர்ந்த நபர் ஒருவர் மிகவும் பழமை வாய்ந்த ஒரு வீட்டில் குடியிருந்து வருகிறார். அப்போது அந்த வீட்டின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிந்துள்ளது. அதனை சரி செய்ய வேண்டும் என்று நினைத்த அவர், மேற்கூரையை இடிக்க தொடங்கினார்.
அவற்றை முழுவதுமாக இட்டடித்த பிறகு தொழிலாளர்கள் அங்கு இருந்த குப்பைகளை அகற்ற தொடங்கியுள்ளனர்.அதில் இருந்து ஒரு பழமையான பெட்டியை கண்டெடுத்தனர். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் பெட்டியை திறந்த பார்த்திருக்கிறார். அதற்குள் ஒரு கடிதம் இருந்துள்ளது.
அது ஜூலை 21, 1941 ஆம் ஆண்டு அன்று எழுதப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில் அப்போது வேலை செய்த கூலி தொழிலாளர்கள் எழுதிய கதை இருந்தது. அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பது, ஜான் ஜான்சன், ஜூல் ஜிசெலின்க், லூயிஸ் சான்ட்ரைன் மற்றும் ஜுல் வான் ஹெமெல்டோன்க் ஆகிய நான்கு பேர் கையெழுத்திட்டனர்.
என்ன இருந்தது?
விசாரணையில், 82 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மேற்கூரையை கட்டிய கூலி தொழிலாளர்கள் தங்கள் வலியை கிடைத்த ஒரு பேப்பரில் எழுதி வைத்தனர் என தெரியவந்தது. இந்த கூரையை மீண்டும் சீரமைக்கும் போது, இதைப் பார்க்க நாங்கள் உயிருடன் இருக்க மாட்டோம்.
நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என்பதை வரும் தலைமுறைகளுக்கு சொல்ல விரும்புகிறோம். நாங்கள் இரண்டு போர்களைக் கடந்து வந்திருக்கிறோம். 1914 இல் ஒன்று மற்றும் 1940 இல் ஒன்று. பசி, தாகத்துடன் இங்கு வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பலர் பசியால் இறந்துள்ளனர்.
எங்களிடம் தினமும் உணவு உண்ண போதுமான பணம் இல்லை. அடுத்த தலைமுறையினருக்கு அறிவுரை என்னவென்றால், போர் அச்சுறுத்தல் ஏற்படும் போது, அவர்கள் உயிர்வாழ தேவையான அளவு அரிசி, காபி, மாவு, தானியங்கள் மற்றும் கோதுமை ஆகியவற்றை
முன்கூட்டியே தங்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டும். உங்கள் வீட்டைக் கவனித்துக் கொள்ளுங்கள், மனிதர்களுக்கு வணக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை படித்த பலரும் அதிர்ச்சியடைந்தனர்.