கொசு மீது அதிக பாசம்; ரத்த தானம் கொடுக்கும் வினோத நபர் - வைரல் வீடியோ!
கொசுக்களுக்கு தனது ரத்தத்தை உணவாக அளிக்கும் நபரின் வீடியோ வைரலாகியுள்ளது.
கொசு
ஒரு விபத்தில் சிக்கி படு காயமடைந்தவர்களுக்கு, ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு ரத்த தானம் வழங்குவது தான் வழக்கம். ஒரு மனிதாபிமானமாக கருதப்படும் இந்த செயல் பலரது உயிரை காப்பாற்றியுள்ளது. ஆனால் ஒரு நபர் கொசுக்களுக்கு தன் ரத்தத்தை தானமாக தருகிறார் என்றால் நம்ப முடியுமா.
பொதுவாக நம்மை கொசு கடிக்காமல் இருக்க பல முயற்சிகளை செய்வதுண்டு. ஓர் வேலை அது கடித்திருந்ததால் மலேரியா, டெங்கு போன்ற நோய்களை உண்டாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் இருப்போம். எனினும் இந்த நபர் அதிலிருந்து சற்று மாறுபட்டுள்ளார்.
ரத்த தானம்
இந்த நிலையில், உயிரியலாளர் ஒருவர் கொசுக்களுக்கு தன் மன விருப்பத்தின்படி ரத்ததானம் அளிப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல உயிரியலாளர் பெரன் ரோஸ். இவர் கொசுக்களை குறித்தும் அதனின் இனப்பெருக்கம்,
ஆயுட்காலம் ஆகியவற்றை குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறார். இதற்காகவே ஆய்வகம் ஒன்றை அமைத்து கொசுக்களை அதிகளவில் உற்பத்தி செய்கிறார். ஆகையால் அவரை அனைவரும் கொசு மனிதன் என செல்லமாக அழைக்கின்றனர். இந்த சூழலில், கொசுக்களின் உணவுக்காக அவர் தன் கையையே நீட்டி ரத்தத்தை தானமாக கொடுக்கிறார்.
அப்போது அவரது கையை சுற்றி மொய்க்கும் கொசுக்கள் கூட்டம் கண் இமைக்கும் நேரத்தில் ரத்தத்தை உறிஞ்சி குடிக்கிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தளத்தில் வெளியாகி 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் வித்தியாசமான கருத்துக்களையும் பெற்று வருகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியையும்,ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.