ஓ..மானங்கெட்ட கொசுவே...வெட்கம் இல்லையா..! - வைரலாகும் தொழிலாளியின் பாடல்

Tamil nadu Viral Video
By Thahir Oct 10, 2022 12:38 PM GMT
Report

கொசு கடியின் தொல்லை தாங்காமல் தொழிலாளி ஒருவர் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கொசு தொல்லை தாங்கமுடியாமல் பாடிய தொழிலாளி 

கொசு தொல்லை என்பது கிராமப் புறங்கள் மட்டுமின்றி, நகரப் பகுதிகளிலும் அதிகமாக இருந்து வருகிறது. கொசு கடியினால் ஏராளமான நோய்கள் பரவி வரும் நிலையில்,

அரசு கொசுக்களை அழிப்பதற்கு நகரப் பகுதி மற்றும் கிராம பகுதிகளில் கொசு மருந்து அடித்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஓ..மானங்கெட்ட கொசுவே...வெட்கம் இல்லையா..! - வைரலாகும் தொழிலாளியின் பாடல் | A Worker S Song About Mosquito Infestation

இந்த நிலையில் மன்னார்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளி ஒருவர் கொசு கடி தாங்காமல் பாடிய பாடல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அந்த பாடலில் ஓ...மானங்கெட்ட கொசுவே...ஈனம் கெட்ட கொசுவே...வெட்கம் ரோசம் உனக்கில்லையாவெட்கம் இல்லையா...என்ற பாடலை பாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.